வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி காரைக்கால் – தஞ்சாவூர் இடையேயான பாசஞ்சர் ரயில் திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மாலை 6.10க்கு புறப்படும் ரயில் இரவு 10.20 மணிக்கு திருச்சி சென்றடையும். அதுபோல இரவு 10.40க்கு திருச்சியில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 2.30க்கு வேளாங்கண்ணி சென்றடையும். அங்கிருந்து அதிகாலை 3.05க்கு புறப்படும் ரயில் மீண்டும் தஞ்சை வழியாக காலை 7 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
திருச்சி – வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டிணம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. திருச்சியில் மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 3.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். அங்கிருந்து மாலை 4.50க்கு புறப்படும் ரயில் இரவு 8.45க்கு திருச்சி வந்தடையும்.
வேளாங்கண்ணி – நாகப்பட்டிணம் இடையே இயக்கும் சிறப்பு ரயிலானது வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 12.40, 02.05 ஆகிய நேரங்களில் நாகப்பட்டிணத்திற்கும், நாகப்பட்டிணத்திலிருந்து மதியம் 1.35 மற்றும் மாலை 3.05 ஆகிய நேரங்களில் வேளாங்கண்ணிக்கும் செல்லும். இந்த சிறப்பு ரயில் சேவைகள் இன்று முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.