Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருப்பதனால் விலை உயர உயர வட்டி மூலமாக அதிக லாபம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். தங்கப்பத்திரம் வாங்கி எட்டு வருடங்கள் வைத்திருக்கலாம். எட்டு வருடம் முடிந்த பிறகு வருமானத்திற்கு வரி செலுத்த தேவை கிடையாது. இந்நிலையில் தங்க பத்திரம் முதலீட்டிற்கான விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 30-ஆம் தேதி) முதல் செப்-5 ஆம் தேதி வரை தங்க பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக வாங்கினால் கிராமிற்கு சலுகை வழங்கப்படும். தங்கப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,732 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.