சிண்டிகேட் வங்கியுடன் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள், காசோலைப் புத்தகங்கள் இன்றுமுதல் செல்லாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல வங்கிகள் அடுத்து அடுத்து பெரும் வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இதனால் சிறிய வங்கியில் உள்ள நடைமுறைகள் நீக்கப்பட்டு புதிய நடைமுறை அமல் படுத்தப்பட்டது. அதேபோல் நீக்கப்பட்ட வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, புதிதாக சேர்க்கப்பட்ட வங்கிகளில் தங்களது சேவைகளை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தனது வங்கி கணக்கு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால், வங்கிப் பரிமாற்ற சேவைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது கட்டாயம் என வங்கிகள் அறிவித்திருந்தது. அதன்படி சிண்டிகேட் வங்கி கனரா வங்கி உடன் இணைக்கப் பட்டுள்ளதால் சிண்டிகேட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள், காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை மாற்றியிருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதற்கு ஜூலை 1 வரை அவகாசம் கொடுத்திருந்தது. இந்நிலையில் இன்றுடன் இந்த அவகாசம் முடிவடைந்துள்ள காரணத்தினால், கனரா வங்கி உடன் இணைக்கப்பட்டுள்ள சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் பழைய ஐஎஃப்எஸ்சி குறியீடு பயன்படுத்தி இன்று முதல் வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் புதிய ஐஎப்எஸ்சி குறியீடுகளை பெறுவதற்கு வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது. இல்லாவிட்டால் 18004250018 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.