தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.