Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. ஜாக்கிரதையா இருங்க மக்களே…! – வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக இன்று புயல் உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது அந்தமான் & அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி தென் தமிழகத்தை நோக்கி வரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |