தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேலும் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி தென்தமிழகத்தில் நோக்கி வரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் அதனால் கனமழை பெய்யும் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு தடை விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.