Categories
அரசியல்

இன்று முதல்…. ஜிஎஸ்டி செலுத்தும் நிறுவனங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் ஜிஎஸ்டி விவகாரத்தில் இந்த விதி முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

மார்ச் மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய நிதி ஆண்டான ஏப்ரல் ஒன்றாம் தேதி இன்று தொடங்கியுள்ளது. நிறைய விதிமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாறுகின்றன. இந்த விதிமுறையை மாற்றங்கள் உங்களை நேரடியாக அதிக அளவில் பாதிக்கும். அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி விதிகளும் மாறுகின்றன. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 20 கோடிக்கும் மேல் விற்று கொண்ட நிறுவனங்கள் B2B என்ற பரிவர்த்தனைகளுக்கான மின்னணு விலை பட்டியல்களை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உருவாக்க வேண்டும். விலை பட்டியல் தயாரிக்கும் முறை கடந்த 2020ஆம் ஆண்டின் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 100 கோடிக்கு மேல் விற்று உள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் மின்னணு விலை பட்டியல்களை உருவாக்குவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 50 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் b2b பரிவர்த்தனைகளுக்கு மின்னணு விலை பட்டியலை உருவாக்கி வருகின்றது. ஆனால் இந்த நிதியாண்டில் இருந்து 20 கோடிக்கும் அதிகமாக விற்றுமுதல் கொண்ட B2B பரிவர்த்தனைகளுக்கான மின்னணு விலைப்பட்டியல்களை தயாரிக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கு பிறகு 20 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் இந்த வரம்பில் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலமாக உள்ளீட்டு வரி கடன் தொடர்பான மோசடிகளும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |