Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூன் 5 வரை… உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு  இன்று  முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை போன்றவற்றிற்கு இன்று  முதல் ஜூலை 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் மே மாதம் முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை, புதன்கிழமை மனு தாக்கல் செய்துகொள்ளலாம். அந்த மனுக்கள் வியாழன், வெள்ளிக் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மே மாதத்தின் பிற வாரங்களில்  திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்துகொள்ளலாம். அந்த மனுக்கள் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும்  கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 20 நீதிபதிகளும், மதுரை கிளைக்கு 15 நீதிபதிகளும்  நியமிக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |