Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூலை 20ஆம் தேதி வரை அதிரடி ……!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று  முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 750 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 460 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 282 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 8 பேர்உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11ம் தேதி ( இன்று ) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பால் மற்றும் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ள எஸ் பி வேலுமணி இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் நத்தம் பகுதியில் முழு ஊரடங்கு ஊரடங்கு பின்பற்றப்படும்.

 

Categories

Tech |