Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜூலை-5 வரை…. புதிய தளர்வுகள் நீட்டிப்பு…. எடியூரப்பா அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவற்றை 50 சதவீத ஆட்களுடன் நடத்தலாம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் கடைகள், உணவகங்கள் மாலை 5 மணி வரை செயல்படலாம். இந்த புதிய தளர்வுகள் இன்று காலை 6 மணி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |