Categories
மாநில செய்திகள்

இன்று முதல் டாஸ்மாக் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் இதோ – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், டாஸ்மாக்கில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்ககூடாது. மதுபானம் வாங்குவோர் தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்பு வெளி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |