Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுக்கள் பெற இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in ரொம்ப இணையதளத்தில் காலை 9 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. மேலும் நாளொன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |