தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை-12 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “வரும் மாதங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் கொரோனாவை எப்படி ஒழித்தோமோ அதைப் போலவே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக தவறான கருத்துகள் கூறப்படுகின்றது. மரணங்களை தமிழக அரசு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது.