Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகம் முழுவதும்…. தடையில்லா மின்சாரம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அல்லாத கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் புகார்களை 1912 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய தகவல்களை 9445850811 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |