Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் திரையரங்கு திறப்பு… மராட்டிய அரசு அனுமதி… மக்கள் மகிழ்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் 50 சதவீத இருக்கைகளின் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இந்த அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி திரையரங்கில் தின்பண்டங்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |