2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியிலிருந்து இன்று தொடங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஓமலூரில் செய்தியாளர்களை சென்ற முதலமைச்சர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று நங்கவள்ளி அருகே பெரியசுரகையில் உள்ள சென்றாய பெருமாள் ஆலயத்தில் நாளை சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறினார்.
பொது போக்குவரத்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்றும், அதன் பெயரில் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். எனினும் ஜிபிஎஸ் பொருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் கூறினார். மின் வாரியத்தை தனியார் மையமாக்கும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
சமையல் எரிவாயு விலை உயர்ந்ததை குறைக்குமாறு மத்திய அரசின் கணத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கேட்ட முழு நிலத்தை மாநில அரசு ஒதுக்கி விட்டதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த நடைமுறை 2011ஆம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் இருந் அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார்.