நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கடந்த 1ஆம் தேதி சென்னை உட்பட நாட்டின் 13 முக்கிய நகரங்களுக்கு 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். அதில் முதல்கட்டமாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, வாரணாசி ஆகிய 4 நகரங்களில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை இம்மாத இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.