Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் நாளை வரை…. வங்கி சேவைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் பராமரிப்பு பணிக்காக இரண்டு நாட்கள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று இரவு 10.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணி வரை எஸ்பிஐ வங்கியின் எந்த ஒரு இணைய சேவையையும் பயன்படுத்த இயலாது என்று குறிப்பிட்டுள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை சம்பந்தமான பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |