Categories
மாநில செய்திகள்

இன்று முதல் நியாயவிலை கடைகள் 12 மணி வரை மட்டுமே….. அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 மணிவரை அனுமதிக்கப்படும். உயிரியல் பூங்காக்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் செயல்பட அனுமதி கிடையாது. நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகள் அனுமதிக்கப்படும். உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.

தேனீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.வருகின்ற திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |