இன்று இந்தியா முழுவதும் புகைப்பிடிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 2ஆம் தேதி “No Smoking Day” கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர் புகை பிடிப்பது நேரடியாக நுரையீரலை பாதித்து புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமன்றி பல விதமான பாதிப்புகளும் உடலில் ஏற்படும். எனவே புகைப் பழக்கத்தை கைவிடவும், புகை பிடிப்பவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக புகை பிடிப்போர் மற்றும் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.