Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. தரிசன நேரம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஜூலை 12 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று முதல் காலை 6 மணி முதல் மதியம் 12 30 மற்றும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலில் நடைபெறும் கால பூஜை அபிஷேகங்களை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலில் தரிசனம் செய்த பின் எந்த ஒரு இடத்திலும் உட்கார பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கோயிலுக்குள் தேங்காய் பழம் கொண்டு வர தடை. அர்ச்சனை செய்வதற்கும் அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |