Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. ஆந்திர மாநில அரசு அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் இன்று  முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.  முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். புதிய கல்வித் திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவோம்.

இதன் மூலம் எந்த ஒரு பள்ளியும் மூடப்படாது. பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு அவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 சதவீதமும், பிளஸ் 1 மதிப்பெண்ணில் இருந்து 70% மதிப்பெண்களையும் இணைத்து பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும். விரைவில் இதன் சான்றிதழ் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

Categories

Tech |