இன்று (பிப்ரவரி 14) முதல் கர்நாடகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் இதனை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த நிலையில் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இந்த விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் இரு தரப்பினரிடையே நடத்திய போராட்டத்தில் கடந்த 9ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு அம்மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கடந்த 10-ஆம் தேதி உத்தரவு போட்டது.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 14) ஆம் தேதி கர்நாடகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மட்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 10 வகுப்பிற்கான உயர்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது மற்றும் மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதேசமயம் கல்லூரிகளின் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.