Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பால் விலை உயர்வு அமல்…. அமுல் நிறுவனம் அறிவிப்பு…!!!

இன்று  முதல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பாக அமுல் என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிறுவனமானது நாடு முழுவதும் பால் விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று  (மார்ச் 1) முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதன்படி பாலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |