Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இன்று முதல்…. புதிய அபராதம் விதிக்கும் முறை அமல்…. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…!!!

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று முதல் புதிய அபராதம் விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்வது ஆகிய விதி மீறால்களுக்கு 1000 ரூபாய் அபராதமும், மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபரதமும் விதிக்கப்படும்.

இதனை அடுத்து ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் 5 ஆயிரம் ரூபாய், ஒரு வழி பாதையில் எதிர் திசையில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் என பல்வேறு விதிமுறைகளுக்கு புதிய அபராதம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |