Categories
மாநில செய்திகள்

இன்று முதல் புறநகர் ரயில் சேவை: ஆண்களுக்கான பயண நேரம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் நாளை இன்று புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும்  பயணிக்கலாம் என்றும், முக்கிய நேரங்கள் தவிர்த்து Non Peak Hours-இல் மட்டும் ஆண்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 9.30 – மாலை 4.30, இரவு 7.30- கடைசி ரயில் செல்லும் வரை ஆண்கள் பயணிக்கலாம். எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒருமுறை மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |