Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்துகள் ஓடாது…. மறு உத்தரவு வரும் வரை… அதிரடி அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே அகமதாபாத் நகரில் உள்ள அரசு, தனியார் ஜிம்கள், விளையாட்டு கிளப்கள், விளையாட்டு மைதானம் வகுப்பு இன்றுமுதல் மறு உத்தரவு வரும்வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மார்ச் 31-ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |