Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு…. பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இன்று (மே 1ம் தேதி) முதல்இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 இலிருந்து ரூ.12 ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.14 இலிருந்து  ரூ.15 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தததையடுத்து பல மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தலாமா என்று யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |