Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம்… சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முன் களப் பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணம் செய்வதற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிகாலை நேரத்திலிருந்து காலை 7 மணி வரையும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, இரவு 7 மணி முதல் சேவை முடியும் நேரம் வரையில் அனைத்து பயணிகளும் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் பயணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |