நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.