Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… பள்ளிகள், கல்லூரிகளை மூடல்… அரசு அதிரடி உத்தரவு ….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதுமட்டுமன்றி பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை இன்று முதல் உடனடியாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |