Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மளிகை கடைகள் திறப்பு…. என்னென்ன கட்டுப்பாடுகள் இதோ…??

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதன் காரணமாக காய்கறி, பழங்கள் தள்ளுவண்டியின் மூலம் விற்பனை செய்யவும், மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகள் தள்ளுவண்டிகள் அல்லது வாகனங்கள் மூலம் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனியாக செயல்படும் மளிகை, காய்கறி கடைகள்  காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லகூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடைகளுக்கு  நடந்து சென்று பொருட்களை வாங்கவேண்டும் என்றும், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் கடைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |