நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது மழலையர் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.