கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை அடுத்து காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளனர்.