Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பலம் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இன்று முதல் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கி போது மருந்தகங்கள், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தவிர ஏனைய கடைகள் இரவு நேரத்தில் இயங்காது.

வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை இந்த மாதம் இறுதி வரை இயங்காது. மேலும் மத வழிபாட்டு தலங்கள் மூடப்படுவதுடன், உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தவிர, ஏனைய பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுகின்றன.

Categories

Tech |