மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் பொது இடங்களில் கூட்டம் கூடுதல், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பொதுமக்கள் கொரோணா பாதுகாப்பு விதிகளை மீறுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பரிசோதனை கண்காணிப்பை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மகாராசாவின் அடுத்த எட்டு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உட்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.ஏற்கனவே புனே மற்றும் அமராவதி மாவட்டங்களில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.