நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று முதல் சென்னை -பாரிஸ் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை காலை 10.25 மணிக்கு பாரிசில் இருந்து புறப்படும் ஏர் பிரான்ஸ் விமானம் இரவு 11.45 மணிக்கு சென்னை வருகிறது. திங்கள் அதிகாலை 1.20 மணிக்கு சென்னையில் இருந்து பாரிஸ் செல்கிறது. வாரத்தில் ஒரு விமான சேவையை மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.