இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று மாலை முதல் வருகின்ற திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் போடப்பட்டுள்ள இந்த முழு ஊரடங்கில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு போது அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி வலியுறுத்தி உள்ளார். மேலும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ராஜஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களிலும் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.