Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு….!!!!

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வார நாட்களில் வழக்கம் போல் காலை 5: 30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இன்று முதல் ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் வழக்கம் போல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கடந்த 2021-ம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவைகள், இன்று முதல் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இரவு 10 மணி முதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும், மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முக கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |