Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரயில்களில் முன்பதிவில்லா பயணம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று  முதல் முன்பதிவு இல்லா 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ரயில்கள் இயக்க படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் மக்களின் தேவைக்காக முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது நவம்பர் 4ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் ரயில் பயணிகளை கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படும். அதில் முதற்கட்டமாக 23 எக்ஸ்பிரஸ் ரயில்களை முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |