நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
இந்நிலையில் வங்கிகளில் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ.15- இல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை 2021 ஆம் ஆண்டு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இதற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.