Categories
மாநில செய்திகள்

இன்று முதல் வங்கிகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் வழக்கம்போல இயங்கும். வாகன வினியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகனம் பழுதுபார்க்கும் மையங்கள், காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |