Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் வாரம் வர உள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுக்க விடுமுறை பள்ளிகள் அறிவித்துள்ளன.

அதன்படி இன்று  புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2-ம் தேதி கல்லறை தினம் வருவதால் அன்றும், 3, 4 ஆம் தேதிகள் தீபாவளியையொட்டியும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் பல தனியார் பள்ளிகள் தீபாவளியையொட்டி அடுத்த வாரம் முழுக்க விடுமுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தீபாவளிக்கு அடுத்த நாள் வழக்கமாக விடுமுறை விடப்படும் என்பதால் வரும் 8ஆம் தேதி முதல் பள்ளி கல்வித்துறை உத்தரவு படி பள்ளிகள் அரைநாள் செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மட்டும் தீபாவளிக்கு பிறகு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருக்கும் என்றும் இதர வகுப்புகளுக்கு முழு விடுமுறை விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |