தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான டோக்கன் இன்று தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்பட்டு, ஜூன்-15 ஆம் தேதி முதல் ரூ.2000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.