ஆந்திராவில் வீடு வீடாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி செய்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அம்மாநிலம் முழுவதும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி தற்போது வீடு வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை அவர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
ரூ.830 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனங்களின் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை விஜயவாடாவில் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். இதனால் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.