Categories
அரசியல்

இன்று முதல்…. வெளியாகவுள்ள ரியல்மி சி31 ஸ்மார்ட்போன்…. ஆர்வத்தில் வாடிக்கையாளர்கள்….!!

ரியல்மியின் சி31 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நிறுவனமான ரியல்மியின் சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த போனில் UI R எடிஷன், 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே, 120Hz டச் சாம்பிளிங் ரேட்டு, 12nm Unisoc T612 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேமாரவை பொறுத்தவரையில் f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா, f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம், 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

இதனையடுத்து 10W சார்ஜிங், 5000 mAh பேட்டரி, சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் போனில் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக 3ஜிபி/32ஜிபி மாடல் ஸ்மார்ட் போன் 8,999 ரூபாயாகவும், 4ஜிபி/64ஜிபி ஸ்மார்ட் போன் 9,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் இன்று மதியம் 12 மணி முதல் ரியல்மி மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Categories

Tech |