Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மாநில வாரியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வரை இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 28 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்த அனுமதிக்க படாது. மழலையர் பள்ளி முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

அனைத்து வகுப்புகளும் வழக்கமான வளாகத்தில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி ஆகிய கொரோனா தடுப்பு வழி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொதுவான தடுப்பூசி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |