பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதால், இணைய சேவைகள் 10 நாட்களுக்கு துண்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியானது நடக்கிறது. இந்நிலையில் மாநில கூடுதல் தலைமைச் செயலர் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள இணைய சேவைகள் மற்றும் மொபைல் போன்களில் பகிரப்படுகின்ற, குரல் பதிவுகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே இதனை தடுக்கும் நோக்கில், மால்டா, முர்ஷிதாபாத், உத்தர் தினாஜ்பூர், கூச்பெஹார், ஜல்பைகுரி, பிர்பூம் மற்றும் டார்ஜிலிங் போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் இணைய சேவைகள் மற்றும் மொபைல் போன் சேவைகள் இன்று முதல் 10 நாட்கள் வரை முழுவதுமாக துண்டிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.