Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27 ஆம்  தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த முதல்வர், 8 ஆம் ஆண்டு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். மேலும் தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் 33 லட்சம் பேருக்கு இன்று முதல் பள்ளிகளில் நேரடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.இதற்கு அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |