Categories
ஆன்மிகம்

இன்று முதல் 10,000 பக்தர்களுக்கு அனுமதி…. ஐய்யப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!!!

சபரிமலையில் இன்று முதல் 10,000 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது. Sabarimalaonline.org.in என்ற இணையத்தளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட்டு ஏற்கனவே 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன், ஆர்டிபிசிஆர் கோவிட் தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |